உதிக்கிறதா திமுக-பாஜக கூட்டணி …!திமுகவிற்காக சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித்ஷா .!சூரியனால் மலருகின்றதா தாமரை …!

கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Related image
இதன் பின் திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
Image result for bjp dmk
இந்நிலையில் ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்  பாஜகவிற்கு எதிராக திமுக நடத்த இருந்த கூட்டம் கருணாநிதி மறைவினால் பாஜக பங்கேற்கும் கூட்டமாக மாறியுள்ளது. மாநில சுயாட்சி மாநாட்டிற்கு சோனியா காந்தி வருவதற்கான சூழல் உள்ளது என திருச்சி சிவா டில்லியில் தெரிவித்த நிலையில் தற்போது அதுவும் மாற்றம் பெற்று குலாம் நபி ஆசாத் பங்கேற்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கும் நிலையில் தற்போது பாஜகவுடன் காங்கிரஸ் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே இதை கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டமா? புதிய கூட்டணிக்கான அச்சாரமா? என்பதை வரும் நாட்களில் அறிய முடியும்.
DINASUVADU

Leave a Comment