இன்றும் உச்சத்தில் பெட்ரோல்,டீசல் விலை …!விழிபிதுங்கும் நடுத்தர மக்கள் …!

இன்றும் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ. 84.05 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல்  டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 77.13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்தது.

Leave a Comment