அ.தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணியிலும் இல்லை, ஆதரவும் இல்லை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவும் இல்லை, கூட்டணியிலும் இல்லை என  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், புலி, மான் இடையிலான நட்பை போல் பாஜக அரசும், அதிமுக அரசும் நட்புறவு பாராட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலி, மான் கதை திமுகவுக்கே பொருந்தும் என்றும், தாங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவும் இல்லை, கூட்டணியிலும் இல்லை என கூறினார்.

திமுக, முந்தைய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தும், காவிரி விவகாரத்தில் எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முடக்கி வருவதாக விளக்கமளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment