ராகுல் காந்தி அவர்களே வருக! நாட்டிற்கு நல்லாட்சி தருக!மு.க.ஸ்டாலின்  அழைப்பு

ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.

 
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
 

பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தமிழர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்.கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன்.கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம்
கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வராதது ஏன்?…தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார். டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment