த.வெ.க மாநாட்டுக்கு இடம் தேர்வு…விரைவில் அறிவிப்போம்- புஸ்ஸி ஆனந்த் தகவல்!

த.வெ.க மாநாட்டுக்கு இடம் தேர்வு…விரைவில் அறிவிப்போம்- புஸ்ஸி ஆனந்த் தகவல்!

bussy anand and vijay

த.வெ.க : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,  வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார். இதனையடுத்து, கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அடிக்கடி ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வருகிறது.

வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவலும் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இன்று ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த் ” எங்கள் தலைவர் விஜய் அவர்கள் அறிக்கையில் எங்களுடைய இலக்கு 2026 என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். எனவே, எங்களுடைய இலக்கு 2026 சட்ட மன்ற தேர்தல் தான். எங்களுடைய கட்சியில் எடுக்கப்படும் எல்லா முக்கியமான முடிவுகள் பற்றி எங்களுடைய தலைவர் தான் அறிவிப்பார். எல்லா முடிவும் எங்களுடைய தலைவருடையது தான்.

இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. எனவே, எதுவாக இருந்தாலும்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தான் அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான இடத்தைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறோம். தேர்வு செய்து முடித்து தலைவர் விஜய் அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனவும் புஸ்ஸி ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube