பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை பாராட்டு.!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடியின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளிய வர கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறித்து ஜி20 நாடுகள் சேர்ந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியா சார்பாக பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் உருவாகி 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாம் இப்போதும் கூட இதை எதிர்ப்பதற்கு என்ன வழி என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று இப்போதுதான் யோசிக்கிறோம். நம்முடைய செயலை உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் சேர்ந்து இந்த கொரோனவை எதிர்கொள்ள வேண்டும். நாம் ஒன்று சேர்ந்தால்தான் இதை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார். 

உலக சுகாதார மைய தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் செயலை ஜி20 நாடுகள் பாராட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. மொத்த நாட்டையும் இந்தியா லாக் டவுன் செய்தது நல்ல முடிவு என்றும் உலக அளவில் இது கவனம் பெறும் என ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்