மக்கள் ஒரு ஆக்சிஜன்; கொரோனா ஒரு நெருப்பு, வெளியே செல்லாதீர்கள் – சச்சின்

இந்தியாவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு இடையில் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில்,இந்திய அரசின்  சுகாதாரத்துறையினர்  மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் . ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நிறைய மக்கள் வெளியே செல்கின்றனர் .மக்கள் ஒரு ஆக்சிஜன், கொரோனா ஒரு நெருப்பு .நான், எனது குடுமபத்தினரும் வீட்டில் இருக்கின்றோம்.அடுத்த 21 நாட்களுக்கு வெளியே செல்லப்போவதில்லை . எனவே அனைவரும் வீட்டில்  இருக்க வேண்டும் . வெளியே செல்ல இது விடுமுறை அல்ல என்று கூறியுள்ளார்.