வேலையில்லா திண்டாட்டம் பொய்….நிதி ஆயோக் மறுப்பு அறிக்கை…!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்து வெளியான சர்வே தவறானது என நிதி ஆயோக் மறுப்பு தெரிவித்துள்ளது.

வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப் புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேலையின்மை குறித்த அறிக்கை வெளியாகி இருப்பது அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வேலை வாய்ப்பு திண்டாட்டம் குறித்த தகவலுக்கு நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சரிபார்க்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பான தரவு எதையும் அரசு வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment