டொயோட்டா யாரிஸ் செடான்(Toyota Yaris Sedan) கார் புதிய அம்சங்களுடன் அறிமுகம்.!

கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா யாரிஸ் கார் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நேர் போட்டியான ரகத்தில் வர இருக்கும் இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், இந்த ஆண்டு மத்தியில் புதிய யாரிஸ் செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா தெரிவித்தது. மேலும், ஏப்ரலில் இந்த காருக்கு அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

 இந்த நிலையில், புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காருக்கு சில டொயோட்டா டீலர்களில் ரகசியமாக முன்பதிவு பெறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், கார் விற்பனைக்கு வந்தவுடன் இந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாகவும் டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. மேலும், 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடல் குறித்து இதுவரை தகவல் இல்லை.
புதிய டொயோட்டா யாரிஸ் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும்.
உட்புறத்திலும் மிகச் சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நேவிகேஷன் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளும் உண்டு. ஆட்டோமேட்டிக் வைப்பர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய டொயாோட்டா யாரிஸ் காரில் 7 ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.11 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு, வெள்ளை, சாம்பல், சில்வர் உள்ளிட்ட வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த கார் டொயோட்டா எட்டியோஸ் மற்றும் கரொல்லா ஆல்டிஸ் கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment