மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1,50,000 வருமான வரிச்சலுகை- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில்,மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்   என்று  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.