3676.55ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் திருப்பியளித்த தமிழக அரசு!

தமிழகத்திற்கு மத்திய அரசானது, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட  நிதி ஒதுக்கப்பட்டது, அதனை முழுதாக பயன்படுத்தாமல் நிதியை மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியது தமிழக அரசு.

ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 3082.39 கோடி, அதில் பயன்படுத்தப்பட்டது 728 கோடி, மீதம்மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டது 2,354.38 கோடி. 

அதேபோல, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட 247.84 கோடி திருப்பி அனுப்பப்பட்டது.,பெண்கள் முன்னேற்றத்திற்க்காக அனுப்பப்பட்ட 23.84 கோடியும் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி நிதியில், 2.35 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டு மீதம் 97.65 கோடி நிதியை அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஆக மொத்தம் மத்திய அரசு தமிழகத்திற்காக ஒதுக்கிய 5920.39 கோடி நிதியில் 2,243.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 3,676.55 கோடி நிதி மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசு!

அதற்காக தமிழக அரசு கூறிய காரணம் என்னவென்றால், ‘ பயனாளிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தாமதமே, நிதியை முழுதாக பயன்படுத்தமுடியாமல் போனதிற்கு காரணம்’ என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.