சோனியின்(SONY) புதிய படைப்பு.!ப்ரொஜக்டர் பொருத்தப்பட்ட ஹெல்மெட்(Projector Helmet) .!

 

சோனி(SONY) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் SXSW (South by South west) மாநாட்டில், தனது புதுமையான படைப்புகளை சமீபகாலமாக காட்சிபடுத்தி வருகிறது . அந்த வரிசையில், இந்தவருடம் எதிர்காலத்திற்கான ஹெட் லைட் (Superception headlight system)ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. ஹெல்மெட் போன்ற அமைப்பையுடைய இதன் முன்பக்கத்தில் சோனி MP-CL1 ப்ராஜக்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் கேட்கும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இதை பயனர் தலையில் பொருத்தியிருக்கும் போது, அவர் கண்ணுக்கு புலப்படும் வகையில் காட்சிகளை திரையிடும்.

மேலும் ஒரு சிறப்பம்சமாக, இதில் சோனி MDR-XB950 ஹெட்போனும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனரை, அந்த காட்சிகளில் மூழ்கிவிடச்செய்யும் அளவிற்கு தேவையான அனைத்து ஒலியையும் துல்லியமாக தரும்.

ப்ரஜெக்ட்டர்:

எடுத்துக்காட்டாக சிலந்திப்பூச்சி ஒன்று எவ்வாறு வலை பின்னும் என்பதை ப்ரஜெக்ட்டர், அந்த சிலந்திப்பூச்சி பார்வையில் காட்சிபடுத்தும் அதே வேளையில், ஹெட்செட்டும் சிலந்திப்பூச்சி சத்தத்தை துல்லியமாக ஒலிபரப்பும்.

சென்சார்கள்: பயனரின் நடவடிக்கைகளை கண்டறிய, இந்த கருவியில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. காட்சிப்படுத்த தேவையான அனைத்து தரவுகளும் மூல கணினியில் இருந்து பெறப்படுகிறது. பயனரின் அசைவுகளை பொறுத்து, ஹெல்மெட் காட்சிகளை ஒத்திசைத்து வெளிப்படுத்துகிறது.

இந்த கருவியை பயன்படுத்தி, மனிதனின் பார்வையில் பல்வேறு உணர்வுகளை, தொழில்நுட்பம் மூலம் பிரதிபலிக்கலாம் என காட்டியிருக்கிறோம் என சோனி நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் விலங்குகளின் பார்வையில் வாழ்க்கை எப்படி இருக்கும் என அறியமுடியும். இந்த கருவியை தலையில் அணிவதால், பயனரின் பார்வையோடு இது ஒத்துபோகிறது. இந்த கருவியை பயன்படுத்தி, விலங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் எளிதில் விலங்குகளை பற்றி அறியலாம்.

The new creation of Sony (SONY)! Projector Helmet.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment