” #ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா ” மோடியை கதறவிடும் தமிழக நெட்டிசன்கள்…!!

  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது . 
  • இந்த நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி நீராடியதை ட்வீட்_டர் வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா  புஷ் பூர்ணிமா விழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடுகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறன்து. சுமார் 50 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வருகின்ற மார்ச் 4ஆம் தேதி வரை நடக்கின்றது. இந்நிலையில் கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சென்றனர்.

 

நேற்று கங்கை நதிக்கரையில் பிரதமர் மோடி புனிதநீராடினார்.இதனால் பிரயாக்ராஜ் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்த்தது.பிரதமர் மோடி புனித நீராடியதை ட்வீட்_டர் வாசிகள் விமர்சனம் செய்துவருகின்றனர்.அதிலும் குறிப்பாக தமிழக இணையதளவாசிகள் என்ற ஹேஷ்டாக்_கை இந்தியளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழக இணையதளவாசிகள் இந்த ஹேஷ்டாக் போட்டு இணையத்தில் ட்ரெண்டிங் செய்வதால் பிஜேபி தரப்பு கடும் ஆத்திரத்தில் உள்ளது.ஏற்கனவே மோடி தமிழகம் வந்த போது #GOBACKMODI என்று உலகளவில் தமிழக இணையதளவாசிகள் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment