தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் – நீதிபதி தாஹில் ரமானி திடீர் சந்திப்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை திடீரென்று மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி தாஹில் ரமானி ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கும், அனுப்பி வைத்தார். மேலும் ராஜினாமாநகல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய்-க்கும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாஹில் ரமானி தலைமையில் நடக்க விருந்த வழக்கு விசாரணைகள், தற்போது நீதிபதி அக்னிகோத்ரி அமர்வு தலைமையில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் நீதிபதி தாஹில் ரமானியை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நீதிபதி தாஹில் ரமானியை சமாதானப்படுத்த இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.