ஆந்திர முதல்வரின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சர்மிளா கைது

ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் சர்மிளா. அம்மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சவால்விடும் வகையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மேலிடம் சர்மிளாவை நியமித்தது. இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில், சர்மிளா தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் … Read more

ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்!

YS Sharmila

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்த இணைப்புக்கு பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ். ஷர்மிளா, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களுடன் காங்கிரஸில் … Read more

புதிய கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது தந்தை எஸ் ராஜசேகர் ரெட்டி அவர்களின் பிறந்த தினமான இன்று ஆந்திராவில் புதிதாக கட்சி ஒன்று துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இன்று மாலை இந்த கட்சி துவக்க விழா நடைபெற உள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைவானவர்களே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த … Read more