தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது – தினகரன்

கிசான் திட்டத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று  தினகரன் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின்கீழ்(Pradhan Mantri Kisan Samman Nidhi)விவசாயிகளுக்கு … Read more

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும் – தினகரன்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும் என்று  தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர்  மணக்கரை பகுதிக்கு விரைந்தனர். அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து … Read more

அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது – தினகரன்

மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரன்,கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.  இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் … Read more

தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது – தினகரன்

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது.மும்மொழிக்கொள்கையைப் போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின்  உரிமைகளை பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது ன்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில்  அவாரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பு … Read more

முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? தினகரன்

காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? என்று தினகரன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது.கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்.   நடைபெற்ற  விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு … Read more

மருத்துவப்பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் தவறு நிகழ்ந்தது எப்படி ? தினகரன்

மருத்துவப்பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் போகிற போக்கில் தவறு நிகழ்ந்தது எப்படி என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.  தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது .ஆனால்  மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம்  செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. அந்த, புகாரில் 3 மாத ஒப்பந்த பணிக்கு 1 மாத ஊதியத்தை கேட்பதாக கூறப்பட்டது. இதனால், தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு … Read more

திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல – தினகரன்

திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு  ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம்  தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று … Read more

மக்களை வாட்டி வதைக்கவே வழி வகுக்கும் – தினகரன்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது . இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  கொரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக்கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி … Read more

நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – தினகரன்

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசு இதைச் … Read more