வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டா கத்திய காட்டி மிரட்றாங்க மை லார்ட்!!

கும்பகோணத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டால், கத்தியை காட்டி மிரட்டி, ஒற்றை கையில் குவாட்டர், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர். கும்பகோணம்-தஞ்சாவூர் செல்லும் சாலைக்கு அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வந்த இரண்டு நபர், சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை வாங்கினார்கள். வாங்கியவுடன், அங்கிருந்து கிளம்பினார்கள். அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், வாங்கிய மதுபானங்களுக்கு பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள், அதில் ஒருவர், … Read more

10 வயது சிறுவன் கண்டுபிடித்த 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை!!

சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும் இவன், டைனோசர் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான். இந்நிலையில், வழக்கம்போல் மாலை நேரத்தில் நதிக்கரையோரம் விளையாண்டு கொண்டிருந்தான். விளையாண்டி முடித்து விட்டு, ஓய்வெடுக்க கல்லின் மீது அமர்ந்துள்ளார். அப்போது அந்த கல், வித்தியாசமாக தெரிந்துள்ளது. உடனே தனது பெற்றோரிடம் அச்சிறுவன் கூறியுள்ளார். உடனே, அவனது பெற்றோர்கள் அந்த கல்லை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர். அதுகுறித்து ஆராய்ந்து பார்க்கையில், அது டைனோசர் … Read more

என்னடா இது! ஒரு ரூபாய்க்கு பரோட்டா, பத்து ரூபாய்க்கு பிரியாணியா??

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் புதிதாய் ஒரு உணவகம் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, புரோட்டா ஒன்றுக்கு ரூபாய் ஒன்றும், பிரியாணி ஒரு பிளேட்டுக்கு ரூபாய் பத்துக்கும் விற்பனை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இந்த தகவல் பரவி, அணைத்து மக்களும் அந்த கடைக்கு விரைந்தனர். கூட்டம் அலைமோதியதால், அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அதனை ஒழுங்குபடுத்தினர்.

லயன் கிங் பாடலை பாடிய கழுதை!! வைரலாகும் வீடியோ!

மனிதர்கள் மட்டும்தான் பாட்டு பாடுவார்களா? நானும் பாடுவேன் என  தனது முதலாளியுடன் இணைந்து தி லைன் கிங் என்னும் திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலை பாடியது. அந்த கழுதையின் முதலாளி பாடியதும், அவர் பின்னே அந்த கழுதையும் மிகவும் அழகாய் பாடியது. தற்பொழுது அந்த வீடியோ, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு!! 19 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது … Read more

சேரன் காலில் விழுந்த சரவணன்! தட்டி கேட்ட கமல் !!

நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் இளக்காரமாக பேசிய சரவணனை கமல் நாயம்  கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று சொல்லிக்கொன்டே சேரன் காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது ஒழுவழியாக சேரன் சரவணனின் சண்டை முடிந்து விட்டது என்பது மட்டும் தெரிய வருகிறது. அடுத்ததாக நிஜமாக முக்கோண காதலுக்கு கமல் முற்றுப்புள்ளி … Read more

பேரரசு மாநில கட்டிடத்தை விட பெரிய ஒரு சிறுகோள் 10 ஆம் தேதி பூமியைக் கடக்கும்!! ஆனால் கவலைப்பட வேண்டாம்!

ஆகஸ்ட் 10 அன்று, சிறுகோள் 2006 QQ23 பூமியின் 0.049 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்) சுமார் 10,400 மைல் (மணிக்கு 16,740 கிமீ) வேகத்தில் பறக்கும். இது நெருக்கமாகத் தெரியவில்லை, ஆனால் பொருளை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் என வகைப்படுத்த போதுமானதாக உள்ளது. கூடுதலாக, இது 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.65 மில்லியன் மைல்கள்) இருப்பதால், இது அபாயகரமானதாக பெயரிடப்படுவதற்கு போதுமானதாக உள்ளது. விண்வெளி பாறை சுமார் 1,870 அடி விட்டம் கொண்டது, இது … Read more

எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!முத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ!!

பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்து  கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிக கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அட்டாகாசமான பொய் தான். ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதைப்பற்றி மிக பெரிதாக எடுக்காமல் வந்த இரண்டு நாட்களில் படும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தனக்கு ஆதரவளித்த … Read more

ஒரு கையில் செல்போன், மறு கையில் ஸ்டேரிங்..!உயிரை கையில் பிடித்து சென்ற பயணிகள்!!

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இப்பேருந்தை முக்கையா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்பேருந்து, அருங்குடியை தாண்டியதும், அவர் தனது கைபேசியை எடுத்தார். ஒற்றை கையில் கைபேசியை பயன்படுத்திக்கொண்டு அவர் பேருந்தை இயக்கினார். இதனை கண்டு அப்பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்தார். அருங்குடியில் பார்க்க தொடங்கிய ஓட்டுநர், திருசிற்றலம்பரை வரை 20 கி.மீ செல்போனை பார்த்து கொண்டபடியே பேருந்தை இயக்கினார். இந்நிலையில், அப்பேருந்தை ஓட்டிய முக்கையா என்ற ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணியிடை … Read more

#MorattuSingle : மொரட்டு சிங்கிள்ஸ்க்கு தனி ஹோட்டல் போலாமா பாய்ஸ்

நமக்கு காதலே வேண்டாம்! என்று கூறும் பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்கும் முரட்டு சிங்கிள்ஸ்க்காக உணவகத்தில் ஒரு பாகத்தை ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது, மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம். தற்பொழுது உள்ள இளைஞர்கள், சிங்கள் என்று கூறுவதை விட, முரட்டு சிங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் #Morattusingle என்ற ஹாஷ்டாக் உருவானது. இதனால் கவரப்பட்ட மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம், தங்களது உணவகத்தில் ஒரு பகுதியை முரட்டு சிங்கிள்ஸ்க்காக ஒதுக்கி, 50% … Read more