தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறுகிறது -அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழக  சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர்.  சட்டமன்ற காங்கிரஸ்  தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வருகின்ற  … Read more

தமிழகம் முழுவதும் மரங்களை வளர்க்க குழு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புது யோசனை…!!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மரங்களை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழக சட்டமன்ற பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற பேரவையில் அரசு பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!

திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.  

பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு. 

பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து: தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார்எனக்கூறி விமர்சித்தார். அதேபோல் ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன்.தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் கூறினார்.அதிமுகவில் என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான்எனவும் … Read more

இன்றைய சட்டப்பேரவையில் இருந்து தினகரன், ஸ்டாலின் வெளிநடப்பு ஏன்..??

  இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்துள்ளார். இது குறித்து வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதுள்ள அரசு மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் கூற முயன்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நான் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். தகுதி நீக்கம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால் … Read more