பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

mk stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்கடையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் … Read more

தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

Fisherman

தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர்.  கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட … Read more

#BREAKING: 21 மீனவர்களை உடனே விடுவித்திடுக – முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம்!

இந்திய – இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை தேவை என முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் … Read more

மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்னதாக 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சமீபத்தில் தான் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மேலும் 21 மீனவர்களை … Read more

43 மீனவர்களுக்கு டிசம்பர் 31 வரை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிச.31ம் வரை நீதிமன்ற காவல். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, டிசம்பர் 31ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது நிலையில், இன்று மேலும் தமிழக மீனவர்கள் 12 பெயரை … Read more

மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் கோரிக்கை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேரை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை, 8 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படை செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more