தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை!!!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ஜெயராஜ் நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவரது மகன் செந்தூர்முருகன் (21). டிப்ளமோ இன் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் எஸ்ஐ சிவலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

திருச்செந்தூரில் ரயில் நேரத்தில் மாற்றம்:ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்  கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற ரயில்வே பணிகள் காரணமாக பழனி-திருச்செந்தூர், திருச்செந்தூர்-திருநெல்வேலி பயணிகள் ரயில்கள் சனிக்கிழமையன்று(ஆக.26) அவ்வழியே இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தூத்துக்குடியில் பரபரப்பு:அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கிது !!

தூத்துக்குடி துறைமுகம் அருகே அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி  துறைமுகம் அருகே இறந்த நிலையில் அரிய வகை திமிங்கல சுறா இரவு கரை ஒதுங்கியது. இது சுமார் 4 மீட்டர் நீளமும், வாய் தட்டையாகவும் இருந்த இந்த திமிங்கலா சுறா ஒன்றரை டன் எடை இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி:தூத்துக்குடி மாவட்டங்களில் 1000 சிலைகள் வைப்பு !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 1000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுதது செல்லப்பட்டு கடலில்  கரைக்கப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் அருகில் குடிநீர் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம்   முழுவதும் கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர, நிலத்தடி நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் தனியார் அனல்மின் நிலையங்கள், ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல் ஆலை ஆகியவற்றுக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் முறைகேடாக உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் போலீஸாரின் உத்தரவை மீறி ஆட்சியர் … Read more

தமிழர் உரிமை மாநாடு:நெல்லை ஆதிச்சநல்லூரில் பிடிமண் எடுத்தனர்!!!

தூத்துக்குடி, நெல்லையில் நடக்கும் தமிழர் உரிமை மாநாட்டில் தமிழர்களின் தொன்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆதிச்சநல்லூரில் இருந்து பிடிமண் எடுத்துச்சென்றனர். திருநெல்வேலியில் நாளை 19ம் தேதி தென் மண்டல தமிழர் உரிமை மாநாடு நடக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் மாநாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து மொழியுரிமையைப் பாதுகாக்க, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளைப் பாதுகாத்து வரலாற்றுரிமையை பாதுகாக்க வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் முதல் அகழ்வராய்ச்சி நடந்த … Read more

தூத்துக்குடியில் சாரல் மழை!!!

தூத்துக்குடியில்  வெயிலின்   காரணமாக மக்கள்  அவதிப்பட்டு வந்தநிலையில்   காலை 11 மணிக்கு மேல் மேகமூட்டமாக இருந்தது , இப்பொழுது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி அருகிலுள்ள தோப்புகளில் தீ விபத்து …!!!

பழையகாயல் அகரம் பாலம் அருகே நேற்று  மதியம் கட்டுக்கடங்காத தீ விபத்து ஏற்பட்டது .சாலையோர தென்னை/ பனை/ வாழைமரங்கள் தீ பிடித்து எரிந்தன. திருச்செந்தூர் ,தூத்துக்குடி இடையே  போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள்  போராடி  தீ-ஐ  கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் சங்க தேர்தல்!!!

தூத்துக்குடியில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தேர்தல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார்.இதையொட்டி நடந்த தேர்தலில் பொருளாளர் வீரபத்திரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் . டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் … Read more

விவசாயிகள் நடத்திய பேய் ஓட்டும் போராட்டம்!!

நிலுவையிலுள்ள வறட்சி நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேப்பிலை, உடுக்கை அடித்துப் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதீய கிசான் சங்க விவசாயிகள் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.