விவசாயிகள் நடத்திய பேய் ஓட்டும் போராட்டம்!!

நிலுவையிலுள்ள வறட்சி நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேப்பிலை, உடுக்கை அடித்துப் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதீய கிசான் சங்க விவசாயிகள் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment