தமிழர் உரிமை மாநாடு:நெல்லை ஆதிச்சநல்லூரில் பிடிமண் எடுத்தனர்!!!

தூத்துக்குடி, நெல்லையில் நடக்கும் தமிழர் உரிமை மாநாட்டில் தமிழர்களின் தொன்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆதிச்சநல்லூரில் இருந்து பிடிமண் எடுத்துச்சென்றனர்.

திருநெல்வேலியில் நாளை 19ம் தேதி தென் மண்டல தமிழர் உரிமை மாநாடு நடக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் மாநாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து மொழியுரிமையைப் பாதுகாக்க, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளைப் பாதுகாத்து வரலாற்றுரிமையை பாதுகாக்க வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் முதல் அகழ்வராய்ச்சி நடந்த ஆதிச்சநல்லூரில் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலத் தலைவர் தமிழச்செல்வன்தலைமை வகித்தார். பிடிமண்ணை வரலாற்று அறிஞர் கே.ஏ.மணிக்குமார் எடுத்தார். 
இந்த பிடிமண் எடுப்பு விழா தமிழர் பண்பாட்டின்படி அலங்கரிக்கப்பட்ட மண் பானையில் எடுக்கப்பட்டு பின் மேளதாளம் முழங்க நெல்லையை நோக்கி கொண்டுசென்றனர். நிகழ்வில்நெல்லை மாவட்ட செயலாளர் நாறும்பூ நாதன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆனந்தன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
author avatar
Castro Murugan

Leave a Comment