குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 1,963,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,739 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், 79104 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதியில், சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்ட்டுள்ளதையடுத்து, … Read more

திருப்பதியில் கொரோனா பாதிப்பு! ஆக.5 வரை முழு ஊரடங்கு!

இன்று முதல் ஆக.5 வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில்,  1,154,917 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,099 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று முதல் ஆக.5 வரை 15 நாட்களுக்கு முழு … Read more

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருப்பதி கோவில்! ரூ.400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு!

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருப்பதி கோவிலுக்கு ரூ.400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், தற்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் அதிகமாக கூடுகிற வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி. இந்த கோவிலுக்கு நாள் … Read more

பசியுடன் தவிப்பவர்களுக்கு திருப்பதியில் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி, வேலை  இன்றி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் பல கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருப்பதியில் பலர் உணவு கிடைக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் உணவில்லாமல் இருப்பவர்களுக்காக நேற்று மதியம் மட்டும் 15,000 உணவு பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர்.  இரவு 20,000 உணவு பாக்கெட்டுகளும் வழங்க … Read more

தாய்மாமன் கடமையை நிறைவேற்றினார் தனுஷ்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் பட்டாசு படத்தை தொடர்ந்து, கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ள நிலையில், ஒரு ஹிந்தி படத்தில்  நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் தனது சினிமா துறையில் மட்டுமல்லாது, குடும்ப  விஷயங்களிலும் பொறுப்புள்ள  நபராக செயல்பட்டு வருகிறார்.   இந்நிலையில், இவர் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து, தனது தாயமாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இந்த நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, செல்வராகவனும் … Read more