2021 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் தொடக்கம்!

நாட்டில் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் துவங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், 10 வருடங்கள் கழித்து வரும் 2021 ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் முன்னதாக மாதிரி … Read more

நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் மும்முரம்

பழுதடைந்த நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில், 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குள், நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

9 மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டு விட்டு….கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்…!!

தஞ்சையில் 9- மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் தஞ்சை இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவாகி நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்த ‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு உள்ளது. புயல் கரையை கடந்த வேளையில் பலத்த காற்று வீசியதால் விவசாய பூமியான பட்டுக்கோட்டையில் தென்னை, மா, … Read more

கஜா தாக்குதலுக்குள்ளான பகுதிக்கு நிவாரணம் வழங்க விரும்புவோர்…!!

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.இன்று காலை கூட தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி  மக்கள் முழுமையான மீட்புப்பணி கேட்டும் , அரசின் … Read more

“அதிக நேரம் வேலை செய்ய முடியாது” ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்..!!

பணி நேரம் முடிந்துவிட்டது என்று கூறி சரக்கு ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 13 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை 3 மணிக்கு புறப்பட்டுள்ளது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாதுளம்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் சென்றதும் அந்த சரக்கு … Read more

தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை திறக்க முதல்வருக்கு தடை

தஞ்சை மாவட்டம் சாந்தபிள்ளைகட்டு பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை நாளை முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் திறந்து வைக்க எபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி அந்த பாலத்தை திறக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த பாலத்தை முதல்வர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1032-வது தஞ்சை ராஜராஜ சோழரின் சதய விழா.

தஞ்சாவூர்;தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை  முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அரசியல்தலைவர்கள்,பொதுமக்களும் ராஜராஜ  சோழரின் சிலைக்கு மரியாதை செய்தார்.இவர் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தஞ்சை பெரிய கோவிலும் சிறப்பு  பூஜைகள் நடைபெற்று வருகிறது.