கொல்கத்தாவில் எஸ்பி முகர்ஜியின் சிலை உடைப்பு !

 வேலூரில் பெரியார் சிலையையும்,திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர். பாஜக கூட்டணி கட்சி திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில்  வெற்றி பெற்ற பின் கம்யூனிஸ்ட் கட்சியனர் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குள் பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் … Read more

ஹெச்.ராஜா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இதனிடையே காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10ஆவது வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் இருவர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை குறித்த சர்ச்சையையடுத்து, அவரது வீட்டில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் … Read more

ஹெச்.ராஜா திடிர் பல்டி! பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை….

  பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை என  ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சிலைகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும்  அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.எனது அட்மின் செய்த தவறுக்காக நான் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி நிகழ்ச்சிக்காக விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அட்மின் பதிவிட்டுள்ளார்.பதிவையும், அட்மினையும் நீக்கிவிட்டேன். பிறர் செய்வதைக் காரணம் காட்டி நானும் அதையே செய்ய விரும்பவில்லை.யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல; வருந்துகிறேன்.வன்முறை இருதரப்பிலும் நடப்பது ஏற்கத்தக்கதல்ல ; அமைதி காக்க … Read more