#Breaking:மேசை உடைப்பு:10 அரசு பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில்,மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,பெற்றோருடன் வந்த மாணவர்களுடன் இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும்,மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்

ஃபேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் ,சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்து காவல்துறை  ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சதீஷ் முத்து என்பவர் சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் ஆவார்.இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் நிகழ்வு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்துள்ளார்.இவரது கமெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இந்த கமெண்ட் குறித்து விளக்கம் அளித்த காவலர் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது என்றும் யாரோ … Read more