சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர், இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவு […]
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பு மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு ஆகியோரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டால், விசாரணை பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை மிரட்டவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வாதிடப்பட்டது. இதை ஏற்று, நீதிபதி ரகுகணேஷின் ஜாமீன் […]
Sathankulam Case – தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தங்களது செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! போலீஸ் விசாரணையில் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது. சிபிஐ […]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சக கைதியாக இருந்த ராஜா சிங் சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை […]
கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.இதில்,பால்துரை என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.மேலும்,இந்த தந்தை […]
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என 9 […]
காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம். சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர் என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜ், செல்லத்துரைத்தான் அழைத்து சென்றனர். கோவில்பட்டி கிளைசிறை மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினர். இதனிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாமதுரை தாயார் மருதகனி உயிரிழந்ததால் இறுதி சடங்கு செய்வதற்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் கிளை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் […]
தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து உள்ளனர். இதனால், பென்னிக்ஸ், […]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள அனைவருமே உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குகளை மாறி மாறி தொடுத்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதார் தனக்கு ஜாமீன் வழங்க கோரிக்கை வைத்திருந்தார் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரகு கணேஷ் இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மாற்ற வேண்டும் எனவும் தனக்கு ஜாமீன் வழங்க […]
போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சாத்தான்குள தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில் பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய வியாபாரிகள் இரண்டு பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் இருந்த நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பெரும் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள் மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி தந்தை, மகன் கொலை வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் தாமஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால ஜாமீன் வழங்கியது. காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தாமஸ் பிரான்சிஸ் தந்தை உயிரிழந்ததால் அக்டோபர் 19-ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் விவகாரத்தில் 10 காவல்த்துறை கைது சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், சமீபத்தில் காவலர் பால்ராஜ் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துப் வரும் […]
மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமேன நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, முதலில் 5 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, மேலும் 5 போலீசார் இந்த இரட்டை கொலை வழக்கில் விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிசிஐடி […]
சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம் மதியம், வடலிவினை இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் அடியில் முத்தார் என்ற அந்த 8 வயது சிறுமி, தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை […]
தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை […]
சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் பாலியல் ரீதியில் சிறுமி துன்புறுத்தல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கல்வினை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், 8 வயதாகும் முத்தார் என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேகர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார். நேற்று […]