இன்று திமுகாவில் இணைகிறார் செந்தில் பாலாஜி..!!!அப்போ அதிமுக….அப்புறம் அமமுக இப்போ திமுகவா…???

அமமுகவில்  இருந்து வந்த செந்தில் பாலாஜி தற்போது அதில் இருந்து பிரிந்து  திமுகவில் இன்று இணையவிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது குறித்து வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில் இதனை உறுதி படுத்தும் விதமாக நேற்று கரூர் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த அலோசனையில் வன்னியூர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் கே என் நேருவுடன் ஸ்டாலின்  அரை மணி நேரம் கடும் ஆலோசனையில் ஈடுபட்டதாக … Read more

மோசடி வழக்கில் ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என போலீசுக்கு கோர்ட் உத்தரவு…!!

மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.40 லட்சத்தை 16 பேரிடம் மோசடி செய்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் டிடிவியின் ஆதரவாளரருமான செந்தில் பாலாஜி கைது

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாலை மறியலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.