திறக்கப்படுகிறதா..?பள்ளிகள்- இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பு, பொதுத் தோ்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகியது.இந்நிலையில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் + 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் … Read more

பாடத்திட்டங்கள் 10% குறைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்களுக்கு பாடத்திட்டம் 10% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், கடந்த சில மாதங்களாக போக்குவரத்து, கல்வி துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் அரசு தற்போது மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பதிவுகள் … Read more

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆன்லைனில் நடத்த அமைச்சர் செங்கோட்டையன் திட்டம்!

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆன்லைனில் நடத்த அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் விளங்கி மலைவாழ் மக்கள் கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படக் கூடிய புத்தாக்க பயிற்சியினை … Read more

புதிய கல்விக்கொள்கை – விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும், செங்கோட்டையன்!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி யோசிக்கும் … Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் – குளறுபடிகள் ஏதும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் குளறுபடிகள் ஏதுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் பவானிசாகர் அணை, கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த … Read more

11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. அந்தவகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் … Read more

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9- ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளே இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 10-ம் வகுப்பு தேர்வு … Read more

11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை 12 ஆம் வகுப்பில் சேர்ந்த பின் எழுதலாம்- செங்கோட்டையன்!

பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்தபடியே பதினொன்றாம் வகுப்பில் வெற்றி பெறாத மாணவர்கள் தேர்வை எழுதலாம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இன்று காலை 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியாகின. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், பதினொன்றாம் வகுப்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து தான் உள்ளது. ஆனால், பதினொன்றாம் வகுப்பில் தோல்வியுற்ற … Read more

பள்ளியில் இனி இணையவழி வகுப்புகள் நடத்தக்கூடாது.. அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். மேலும் அவர், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகுமா..?

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் அனைத்து கடைகளும் , திரையரங்கம் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாததால்  1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசுக்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.அதில் ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போனதால் தேர்வு எழுத துடித்துக்கொண்டு இருந்த லட்சக்கணக்கான … Read more