உக்ரைன், மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா, 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், பேஸ்புக்கில் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட பல நகரங்களில் … Read more

உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ஏவுகணை மழை பொழியும் ரஷ்யா.!

தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை  நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க உக்ரைன் வலியுறுத்தல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினரில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. 1991ல் சோவியத் யூனியன் பிரிந்ததில் இருந்து ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சோவியத் ஒன்றியத்தின் இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் கூறியது. கடந்த 30 ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சட்ட விரோதமாக இருந்து வரும் ரஷ்யா, போர்கள் … Read more

ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் உயிரிழப்பு.! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்.!

ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார். ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் . இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் … Read more

உக்ரைனில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! தகர்த்த உக்ரைன்.!

உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது.   உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட … Read more

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை தயார்படுத்தும் ரஷ்யா- உக்ரைன் தகவல்

உக்ரைனின் கீவ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாக உக்ரைன் தகவல். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2 லட்சம் புதிய படை வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி எச்சரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு எத்தனை பீரங்கிகள், எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்று நாங்கள் அனைத்து கணக்கீடுகளையும் செய்துள்ளோம். தற்போதைய நிலை மற்றும் … Read more

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா அளித்தால், அதுதான் முதல் இலக்கு- ரஷ்யா

அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளித்தால், அதுதான் முதல் இலக்கு என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கினால் அதுதான் ரஷ்யாவிற்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ரியாட் ஏவுகணைகள், அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த பேட்ரியாட் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் மிகவும் மேம்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. பேட்ரியாட் … Read more

இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலைக்கு கோரிக்கை வைத்த பாகிஸ்தான்! மறுத்த ரஷ்யா.!

பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் தரமுடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்தது, இதனால் ரஷ்யா தனது எண்ணெய் வணிகத்தை ஆசிய நாடுகளுக்கு வழங்க தொடங்கியது. ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வரும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை மலிவான விலையில் வாங்கிவருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் விலையை இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையில் தரும்படி கோரிக்கை விடுத்தது, ஆனால் ரஷ்யா … Read more

ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை-அமெரிக்கா

ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்த வில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் அதன் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். நாங்கள் உக்ரைனின் சுதந்திரத்திற்காக அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் மண்ணில் நடக்கும் தாக்குதலுக்கு பதிலளிப்பதற்காக ஆயுதங்களை வழங்கி வருகிறோம், இதனை அவர்கள் எல்லை தாண்டி பயன்படுத்த அமெரிக்கா … Read more

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யா திட்டம்.! பிரிட்டன் உளவுத்துறை ‘ரகசிய’ எச்சரிக்கை.!

உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது  பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் … Read more