வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைப்பு ! வீட்டுக் கடன், வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மும்பையில்  ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  ரெப்போ வட்டி விகிதத்தை 6%லிருந்து குறைத்து அறிவித்தது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதமாக குறைத்துள்ளது.வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடன்,வாகன கடன்களுக்கான … Read more

விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், மஹாத்மா காந்தி படம் பொறித்த 10 ரூபாய் நோட்டுகளை போலவே, இந்த ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை…ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கை வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டிவிகிதம் 6.50 சதவீதமாகவும், … Read more

பார்வையற்றவர்கள் பணத்தை எளிதில் அடையாளம் புதிய வழி ! ரிசர்வ் வங்கி தகவல்..!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பணத்தாள்களை எளிதில் அடையாளம் காணுவது குறித்த மாற்று வழிகளை ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பணத்தாள்களுக்கு இடையேயான மதிப்பை பகுத்தறிய சற்று மேலெழும்பிய வகையிலான அச்சு பயன்படுத்தப்படுகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் இரு பக்க ஓரத்திலும் 7 கோடுகள் இதற்காக உள்ளன. ஆனால், புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை  அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் … Read more

மூடும் அபாயத்தில் பொதுத்துறை வங்கிகள் எஸ்.எஸ்.முந்த்ரா எச்சரிக்கை…!

மிக மோசமான வருவாய் இழப்பிலும், வராக் கடன் சிக்கலிலும் மாட்டித் தவிக்கும் இந்திய வங்கிகள் நீண்ட நாள்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா எச்சரித்துள்ளார். வராக் கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதியளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் … Read more

பழைய ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி !

பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நோட்டுகளின் நிலை … Read more