இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் விநியோகம்.!

இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு உத்தரவுக்கு … Read more

ஏப்ரல் 2 முதல் 15 வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் – தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். இதையெடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு  … Read more

ஜனவரி முதல் அமல்.! ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு மத்திய அரசின் புதிய திட்டம்.!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவது ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு. முதல் கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய … Read more

இன்னும் 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சுமார் 10 லட்சம் குடும்பத்தினர் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இவர்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு மேலும் சில நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்ததால், சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதன் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு கடந்த 19ஆம் தேதி முதல், இன்று (26-11-2019) வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை 1 லட்சம் … Read more