கேரள சட்டம் ஒழுங்கை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சீர்குலைக்கிறது…முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டு…!!

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் வன்முறையில் 91 சதவிகிதம் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் வன்முறை செய்கின்றனர். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சங் பரிவார்_கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய முதல்வர் பினராயி விஜயன் வன்முறையின் போது, பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார்.

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்….!!

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு காவல் துறைக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். இதனை முன்னிறுத்தி மாநிலத்தில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் … Read more

உதவுவதன் முலம் ஓணத்தை கொண்டாடுவோம்..!கேரள முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் எனவும் தெரிவித்தார் கேரள முதலவர் பினராயி விஜயன்.இன்று ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் ஓணம் பண்டிகையை வசந்த விழாவாக கொண்டாடுவர் ஆனால் இந்த வருடம் கேரளா கடும் சோதனைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU