#BREAKING: உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து..!

நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை என அறிவிப்பு.  நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.

#BREAKING: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக உயர்வு!

நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றை தினம் வரை 223 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு தரப்பில் … Read more

#BREAKING: ஒமிக்ரான் பரவல் – பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று, ஜம்மு காஷ்மீர் … Read more