குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு … Read more

#BREAKING: உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து..!

நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை என அறிவிப்பு.  நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.

கொரோனா பரவலால் ரூ.7400 கோடியை சேமித்த கூகுள்…!

கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால்,கூகுள் நிறுவனம் ரூ.7400 கோடியை சேமித்துள்ளதாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்றானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளன.இருப்பினும்,இதற்குப் பின்னால் லாபகரமான திட்டங்கள் உள்ளன. ஏனெனில்,ஒரு இடத்தில் நிறுவனம் அமைத்து அந்த இடத்திற்கு வாடகை கொடுக்க தேவையில்லை. மேலும்,மின்சாரக் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.எனவே,ஊழியர்கள் … Read more

சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் அறிக்கை!

சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல ஆய்வுக் கூடங்களில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதுடன், பல ஆய்வுக் கூடங்களில் ஏன் பரவுகிறது என்ற ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பாடும்பொழுது வெளிப்படக்கூடிய ஸ்ப்ரே துகள்கள் மற்றும் நீர்த்துளிகளால் சுற்றியுள்ள காற்றில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் நாங்கள் பாடும்போது உண்மையில் வெளிப்படக்கூடிய … Read more