மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் வருகின்ற பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் … Read more

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் – இன்று ஆலோசனை..!

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் நடத்துகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பல பிரதிநிதிகளுடன் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் ஆலோசனை கூட்டம் இன்று வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் நடைபெறுகிறது. டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து இன்று முதல் பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் … Read more

உயர்கல்வி நிறுவனங்களுக்கு GST வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி..!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என  மத்திய நிதி அமைச்சருக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு கட்டணம், … Read more

கிரிப்டோகரன்சி விளம்பர தடை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை-நிர்மலா சீதாராமன்..!

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி பற்றி கேள்வி எழுப்பியபோது புதிய மசோதாவை உருவாக்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இன்றைய காலகட்டத்தில் நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான விவாதம் நடத்தப்படும். கிரிப்டோகரன்சிகள் தவறானவர்களின் … Read more

45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – 20 மாதங்கள் கழித்து நேரடியாக பங்கேற்பா?..!

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் 45 வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் … Read more

வாராக்கடன் பிரச்சனை: ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் என நிதியமைச்சர் தகவல். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ரூ.30,600 கோடி உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடன்களுக்கான ஒப்புதல் மதிப்பில் … Read more

பாரதியார் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடி எட்டயபுரத்தில் பாரதியார் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த ஊரில், அவரின் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வாழிய பாரத மணித்திருநாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார் நிதியமைச்சர். மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின் பாரதியார் நூற்றாண்டு விழாவில் பேசிய நிதியமைச்சர், பெண் விடுதலைக்காக முதன்முதலில் … Read more

ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது 62-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் … Read more

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாததன் காரணம் இது தான்”- அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாததன் காரணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா எனப் பெரும்பாலான மாநிலங்களில் வரை பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக,கடந்த மே 4-ம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை 38 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன .இதனால், … Read more

தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது -நிர்மலா சீதாராமன்..!

தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தங்கப் பத்திரம் (SGB) திட்டத்திலிருந்து ரூ.31,290 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாற்று நிதிச் சொத்தை வளர்ப்பதற்கான முக்கிய நோக்கத்துடன் மற்றும் தங்கத்தை வாங்குவதற்கு/வைத்திருப்பதற்கு மாற்றாக SGB திட்டம் நவம்பர் 5, 2015 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது என்று சீதாராமன் மக்களவையில் … Read more