கிரிப்டோகரன்சி விளம்பர தடை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை-நிர்மலா சீதாராமன்..!

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி பற்றி கேள்வி எழுப்பியபோது புதிய மசோதாவை உருவாக்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இன்றைய காலகட்டத்தில் நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

விரைவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான விவாதம் நடத்தப்படும். கிரிப்டோகரன்சிகள் தவறானவர்களின் கைகளுக்குச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மசோதா கொண்டு வருவோம், அதன்பிறகு விவாதிக்கலாம்’ என்று தற்போது அதிகம் கூற விரும்பவில்லை என்றார். எவ்வாறாயினும், டிஜிட்டல் நாணயத்தின் விளம்பரங்களை நிறுத்த அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதி அமைச்சர் கூறினார்.

author avatar
murugan