உயர்கல்வி நிறுவனங்களுக்கு GST வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி..!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என  மத்திய நிதி அமைச்சருக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம்

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என தெரிவித்தது. இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
murugan