அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் – இன்று ஆலோசனை..!

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் நடத்துகிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பல பிரதிநிதிகளுடன் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் ஆலோசனை கூட்டம் இன்று வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் நடைபெறுகிறது.

டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து இன்று முதல் பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் நிதியமைச்சர் பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்களை தொடங்குவார் பிப்ரவரி 1, 2022 அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21 நிதியாண்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு ரூ.3.71 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் குறைவான காலமே உள்ளது. இதனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயத் துறை, வேளாண் செயலாக்கத் தொழில், தொழில்துறை பிரதிநிதிகள், சுகாதாரம், கல்வித் துறை வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்பை நடத்துவார் என்று நம்பப்படுகிறது.

நிதி அமைச்சரின் நான்காவது பொது பட்ஜெட்:

இந்த பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பொது பட்ஜெட். அவர் தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 2019 இல் தாக்கல் செய்தார்.  இதற்குப் பிறகு 2020 மற்றும் 2021 பொது பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan