“ராகுல் காந்தி உள்நோக்கோடு பேசுகிறார்” நிர்மலா சீதாராமன் விளக்கம்..!!

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் , 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிகவும் முக்கியமானது என்றும், தீவிரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தானின் தளங்களை அழிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது எனவும் கூறினார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டதாவும், இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்நோக்கத்தோடு பிரச்சினையை எழுப்பி வருகிறார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது குறித்து … Read more

Breaking News: பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தார் நிர்மலா சீத்தாராமன் பரபரப்பு

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார்  இதனிடையில் பன்னீர் செல்வதை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது . தனது சகோதரர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டபொழுது ராணுவ விமானம் தந்ததற்கு நன்றி தெரிவிக்க வந்ததாக கூறியிருந்தார் .இதனிடையில் எம்பி  மைத்திரேயன் மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீத்தாராமன் அலுவலக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .