மான்களிடம் பரவு புதிய நோய் – அச்சத்தில் கனடா மக்கள்!

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ள நிலையில், தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட் மாகாணத்தில் மான்கள் இடையே புதிய ஜாம்பி நோய் உருவாகி உள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரணமாக செயல்பட தொடங்குமாம். அதன் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆந்திர மக்களை தாக்கிய மர்ம நோய்! ஆந்திர முதல்வர் நேரில் ஆய்வு!

ஆந்திராவில் 250க்கும் மேற்பட்டவர்களை மர்ம நோய் தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆந்திர முதல்வர்.  ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது … Read more

கொரோனாவுடன் சேர்ந்து குழந்தைகளை தாக்கும் புதிய நோய் – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உலக முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கே இன்னும் தடுப்பு மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த புதிய அலர்ஜி நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று ஐரோப்பிய நாடுகளிலும் கூட … Read more