நிவாரண முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையை நெருங்கி இருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை விட்டு விலகியுள்ளது. இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில், மழைநீர் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் … Read more

மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதல்வர்..!

mk stalin

இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு 110கி.மீ தொலைவில் புயல்..! இன்று இரவு வரை … Read more

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி..! முதல்வர் வாழ்த்து..!

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார். இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3 இந்திய வீராங்கனை ஆவார். வைஷாலி தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..! … Read more

தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல் – முதல்வர் ஆலோசனை..!

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல் – வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது … Read more

சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ.  மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு … Read more

காலனி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட்டில் காலனி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் பின் உரையாற்றிய அவர்,  சரியாக ஓராண்டு காலத்தில் திறப்பு விழாவில் பேசுவில் எனக்கு மகிழ்ச்சி. தோல் மற்றும் காலனி துறையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற வளர்ச்சியை பார்க்கும் போது, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொளாதார மாநிலம் என்கின்ற பெயரை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை … Read more

‘நம்மைக் காக்கும் 48’ – 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Ma.subramaniyan

கடந்த 2021-ஆம் ஆண்டு நம்மை காக்கும் 48 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், திட்டம்விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவச் செலவுகளை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைவிரித்த உச்சநீதிமன்றம்… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி! நெடுஞ்சாலைகளில் … Read more

வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

mkstalin

தல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் 1 தந்தை வீடு தமிழ்நாடு தான். பெரியாரின் சமூக நீதி மண்ணில் முதல்முறையாக … Read more

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

vpsigh

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனைகள் எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன … Read more

அரசு மருத்துவமனைகள் எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன – அண்ணாமலை

annamalai

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் … Read more