வைகை நதியிலுள்ள மையமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்…!!

மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது. மதுரை வைகை ஆற்றின் நடுவே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டமைய மண்டபம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இந்த மண்டபத்தில் 36 தூண்கள் இருந்த நிலையில் தற்போது 24 தூண்கள் மட்டுமே உள்ளன. மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த மண்டபத்தை மறுசீரமைக்க 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, சுமார் 43 லட்ச ரூபாய் … Read more

8 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி இளைஞர் கொலை செய்ய முயற்சி….!!

மதுரையில் 8 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் கணேஷ்குமார் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களின் மூத்த மகள் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் உரிமையாளர் மகன், சிறுமி மீது மின்ஒயரை பாய்த்துள்ளார். மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த சிறுமி, சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், கணேஷ்குமாரை உடனடியாக வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் பிரச்சினை … Read more

மதுரை ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம்…!!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15, 16, 17ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நடக்கும் திடலில் 8 அடி உயரத்தில் இரண்டு … Read more

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள்…!!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் என்ன தெரியுமா? மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்புகள் இந்தியாவில் 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. கூடுதலாக 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக தமிழ்நாடு, தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆயிரத்து 264 கோடி … Read more

மாநில அளவிலான குத்துச்சண்டை…மதுரையில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு…!!

மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி 4 நாட்கள் நடைபெறுகிறது. தனியார் கல்லூயில் நடைபெறும் இப்போட்டியில் உத்தரகாண்ட், தெலங்கானா, பீகார், அரியானா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.போட்டியில் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதி, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவில் … Read more

நில அளவையர் வீட்டில் திருடப்பட்ட தங்க, வைர நகைகள், ரூ.40,000 பறிமுதல்…!!

வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய சிவகங்கையை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற நில அளவையர் வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடிவந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் … Read more

சாத்தையாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!

விவசாயிகள் பாசனத்துக்காக சாத்தையாறு அணையில் இருந்து  தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தையாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக வருகின்ற 26-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.சாத்தையாறு அணையில் தண்ணீர் திறப்பால் சுமார் ஆயிரத்து 499 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.அணையில் … Read more

BREAKING NEWS:கஜாவின் தீவிரத்தால் மதுரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!!

கஜா புயலால் மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் தமிழகத்தில்  திருவாரூர், தஞ்சாவூர்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,புதுச்சேரி,காரைக்கால்,சிவகங்கை உள்ளிட்ட தமிழக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கஜா காலையில் நாகை கடற்கரையில் கடந்தநிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டநிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU

ஆக்கிரமிப்பில் அலட்சியம்……மெத்தனம்…நகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை நறுக் கேள்வி…!!!

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீர்நிலைகளில் குவிந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். DINASUVADU

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்து விசாரணையை கையில் எடுத்த போலிசார் விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்தையும்,பயணிகளையும் பதற வைத்த அந்த தொலைப்பேசி  வெடிகுண்டு மிரட்டல் யார் என்று தேடிய போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது மிரட்டல் விடுத்தவர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் … Read more