கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்!

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான … Read more

தடை செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள … Read more

கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் திறக்கப்பட்ட கல்லூரிகள்!

கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்கலாம். 2020 ஆம் ஆண்டு துவங்கியது முதலே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் படிப்பு கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக நடத்தி வந்த பாடங்கள் தற்பொழுது நேரில் கல்லூரிகளுக்கு சென்று … Read more

என் பாதையில் ஏன் குறுக்கே வந்தாய் – குடி போதையில் பாம்பை குதறிய இளைஞர்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையால், அளவுக்கு மீறிய குடி போதையில் குறுக்கே வந்த பாம்பை கடித்து குதறிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், சில இடங்களில் மக்களின் நிலை உணர்ந்து அரசாங்கம் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்ட மதுக்கடைகள் நேற்றுதான் கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அனுமதியுடன் திறக்கப்பட்டது. இதனால் … Read more

முன்னாள் முதலமைச்சர் மகன் திருமணத்தில் விதி மீறினால் நடவடிக்கை – கர்நாடக துணை முதலமைச்சர் எச்சரிக்கை!

கர்நாடகாவில் உள்ள முன்னாள் முதலமைச்சராகிய குமாரசாமி அவர்களின் மகன் நிகில் கவுடா அவர்களின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணபாப்பாவின் பேத்தி ரேவதியை திருமணம் செய்கிறார்.  இதனை தொடர்ந்து ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனாவால் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்று சொல்லியிருப்பதால் குமாரசாமி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக … Read more

144 தடையை மீறினால் கைது – கலெக்டருக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தற்போது மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா தற்பொழுது கலெக்டருக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லைகளை மூடிய பின்பு மற்ற மாவட்டத்திற்கும் அல்லது வீடுகளை விட்டு வெளியேற காரணம் இன்றி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடையில் அதிக விலை வைத்து விற்பது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளை மூடுவது … Read more