தடை செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் ஓரளவு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், சில விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்னாடக மாநிலத்தில் இந்த வருடத்திற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரங்களில் கிளப்புகள், கோவில்களில் அதிகப்படியான மக்கள் சேருவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதாலும், இதனால் கொரோனா வைரஸ் தீவிரமடையலாம் என்பதாலும் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 2 ஆம் தேதி வரை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal