மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியா.?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திரைப்படங்களில் தனித்தனியாக செயல்பட்டதுபோல, அரசியலிலும் ரஜினியுடனும்,மற்ற கட்சிகளுடனும் தாம் வேறுபடுவதாக  தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்மீகத்தில் நாட்டமுடைய ரஜினி குறிப்பிட்ட ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால்,ஆன்மீக அரசியலில் உறுதியாக இருந்தால் தமக்கும் அவருக்கும் வேறுபாடு எழுவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் தாங்கள் தனித்தனியாகப் பிரிவதும் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமக்கு எந்த மதமும் கிடையாது … Read more