கொரோனா வைரசால் ஒரு வருடம் தாமதமாகும் ககன்யான் திட்டம் -சிவன் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக விண்வெளிக்கு மனிதன அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டம் ஒரு வருடம் தாமதமாகிவிடும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு நாங்கள் இதற்கான இலக்கை வைத்துள்ளோம் என்றும் சிவன் கூறியுள்ளார்.முதலாவதாக டிசம்பர் 2020 ஆண்டில் இந்த திட்டத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக 2021-ஆம் ஆண்டில் ஜூன் மாதமும்,மூன்றாவதாக  2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  மனிதர்கள் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் … Read more

சந்திராயன் – 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் பணியில் இஸ்ரோ தீவிரம்

நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏற்றப்படுகிறது. ஜூலை 15 ம் தேதி விண்ணில் ஏற்றப்படும் இந்த ஏவுகணை செப்டம்பர் 6 ம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராக்கெட்டை … Read more

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது- இஸ்ரோ தலைவர் சிவன்

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,  விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.