இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது- இஸ்ரோ தலைவர் சிவன்

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,  விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment