தல தோனி மாஸ்டர்கிலாஸ் சேஸிங்: இந்திய அணி அபார வெற்றி!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய காலத்தில் இரு அணிகளும் இறங்கியய்து.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் அதிரடி வீரர் மகேந்திர சிங் தோனி அற்புதமாக சேஸிங் செய்து இந்திய அணியை வெற்றி கோட்டை தொட வைத்தார்.

114 பந்துகளில்  87 ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றி பெற உதவி புரிந்தார் இதில் கேதர் ஜாதவின் பங்கு மிக அதிகம் 57 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இந்திய கேப்டன் விராட் கோலி 62 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

author avatar
Srimahath

Leave a Comment