திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி – எதிராக தொடரப்பட்ட மனு விசாரணை

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து  தொடரப்பட்ட மனு இன்று விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.  திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 … Read more

மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் இடம் ஒதுக்க கோரி வழக்கு தள்ளுபடி

7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது  கோரிய வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல்  இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் … Read more

கொடுமணல் அகழாய்வு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடுமணல் தொடர்பாக நெல்லை காமராஜ் என்பவரும் , புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது. அப்பொழுது,கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்  மொழியை சார்ந்தவை, ஆனால் இது தொடர்பான பணிக்கு சமஸ்கிருதம் அறிந்தவர்கள் ஏன் பணியில் இருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.பின்னர் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த … Read more

7.5% இட ஒதுக்கீடு விவகாரம் ! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

7.5% இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு ,பின்பு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் ,அதற்கு ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழக … Read more

லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சூர்யா பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது வழக்கில்,தமிழகம் முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்,விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும்  விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வாங்குவதாகவும் என்று தெரிவித்தார். விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை … Read more

7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ! 16-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வரும் 16-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.ழ் இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளி … Read more

தமிழ்மொழி புறக்கணிப்பு ! நாளை அவசர வழக்காக விசாரிக்கிறது நீதிமன்றம்

மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக   உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது,சமீபத்தில் இந்த நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.அந்த விளம்பரத்தில், முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிறகு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் … Read more

தந்தை -மகன் கொலை வழக்கு ! குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தந்தை -மகன் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, … Read more

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு ! காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில … Read more